குகைவழி பாதை அமைக்க கோரிக்கை

Update: 2025-04-27 14:47 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதி வழியாக திருச்சியில் இருந்து ஈரோடு, கோவை மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கும் அந்தப் பகுதிகளில் இருந்து கரூர், திருச்சி, சென்னை வரை ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில்வே பாதைக்கு பின்புறம் அம்பேத்கார் நகர், மதுரை வீரன் நகர், நாடார் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு வசித்து வரும் பொதுமக்கள் இந்த ரெயில்வே தடண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் குகைவழி பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்