கிருஷ்ணகிரி நகரில் இருந்தும், ஓசூர் நகரில் இருந்தும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பயன் பெறுகிறார்கள். இந்த பஸ் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தப்படுகின்றன. மீண்டும் காலை 4 மணிக்கு பிறகே பஸ் சேவை தொடங்குகிறது. இதனால் இரவு நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சுற்றி உள்ள கிராம மக்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே இரவு நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்கவோ அல்லது எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், சாதாரண கட்டணம் என செல்ல கூடிய புறநகர் பஸ்கள் நின்று செல்லவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷியாம், குருபரப்பள்ளி.