புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா அன்னவாசல் அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சேதம் அடைந்தும், போதிய இருக்கைகள் இன்றியும் உள்ளதால் பெண்கள், முதியவர்கள், கர்பிணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.