போக்குவரத்து பாதிப்பு

Update: 2025-04-27 12:40 GMT

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலை குறுகளாக காணப்படுவதினால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்