சாத்தான்குளம் யூனியன் நடுவக்குறிச்சி பிரகாசபுரத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டுக்கு சென்றுதான் வெளியூர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். எனவே திருச்செந்தூரில் இருந்து நடுவக்குறிச்சிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்சை (வழித்தட எண்: 61 இ) பிரகாசபுரம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.