கோவை காந்திபுரத்தில் இருந்து அக்கநாயக்கன்பாளையம் வரை 69சி எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அக்கநாயக்கன்பாளையம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பட்டணம்புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பயன் பெற்று வந்தனர். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த பஸ்சை நம்பி இருந்த பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முன்வருவார்களா?.