திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பாரதியார் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையை சீரமைக்க அதிகளவில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பல மாதங்களாக அதற்கான பணியை தொடங்காமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் ஜல்லிகற்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை பணிகளை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.