பஸ் வசதி வேண்டும்

Update: 2025-04-20 09:47 GMT
துறையூர் நகரம் திருச்சி மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய தாலுக்கா வாங்கும். இங்கு தான் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான பச்சை மலை அமைந்துள்ளது. துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு ஆன்மீக பயணமாக சென்று வருகிறார்கள். தற்போது துறையூர் மக்களுக்கு நேரடி பஸ் வசதிகள் இல்லாததால் திருச்சி , பெரம்பலூர் சென்றும் அங்கிருந்து செல்கிறார்கள். எனவே திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து உப்பிலியபுரம் தம்மம்பட்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் வழியாக திருப்பதி செல்ல நேரடி பஸ் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்