பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

Update: 2025-04-20 09:38 GMT
தோட்டக்குறிச்சி பஸ்நிறுத்த பயணிகள் நிழற்குடை கட்டப்பட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கட்டிடத்தின் உள்ளே நிற்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு நிற்கின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்