உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கனரக வாகனங்கள் பீக் அவர்ஸ்-ல் நுழைவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் ஆம்புலன்சு கூட செல்ல முடியவில்லை. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.