நொய்யல் , குறுக்குச்சாலை பகுதி வழியாக இரவு நேரத்தில் தார் சாலையில் இருசக்கர வாகனங்கள் ,கார்கள், வேன்கள் என ஏராளமான வாகனங்கள் இரவில் சென்று வருகின்றன. இந்நிலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற நான்குசக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி பொருத்தப்பட்டுள்ள பல்புகளை மாற்றி விட்டு அதிக பவர் உள்ள எல்இடி பல்புகளை பொருத்தி இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் தரும் பல்புகளை எரியவிட்டு எதிரே வரும்போது அவர்களுக்கு எதிரே வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க முடியாமல் தடுமாறி விபத்து ஏற்பட்டு வருகிறது . எனவே இரவு நேரத்தில் பவர் உள்ள பல்புகளை மாற்றி வரும் வாகனங்களை சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.