பஸ் வசதி வேண்டும்

Update: 2025-04-13 10:14 GMT
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி குந்தாணி பாளையம் நத்தமேடு , ஒரம்ப்பாளையம்,நல்லிக்கோவில், ஓலப்பாளையம் ,அதியமான் கோட்டை , காகிதபுரம் ,வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்தி வேலூர் பகுதிக்கு புதிதாக வழித்தடம் அமைத்து இந்த வழியாக அரசு நகர பேருந்துகளை இயக்க வேண்டும். இந்த பகுதிகளில் இருந்து பள்ளி ,கல்லூரி மாணவ ,மாணவிகள், பல்வேறு பணிகளுக்கு செல்லும் இளைஞர்கள் ,பெண்கள் ,நடுத்தர மக்கள் பேருந்து இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பிட்ட பகுதிக்கு நடந்தே சென்று பேருந்தில் ஏறி செல்கின்றனர் .பேருந்து போக்குவரத்து இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக கூலித் தொழிலாளிகள் குறிப்பிட்டு நேரத்திற்கு முன்னதாகவே வீட்டில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பரமத்தி வேலூர் பகுதியில் இருந்தும், கொடுமுடி பகுதியில் இருந்தும் அதியமான் கோட்டை, நத்தமேடு வழியாக புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்