புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிக்காக அக்னி ஆற்று நீரேற்று நிலையத்தில் இருந்து கறம்பக்குடி காந்தி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி வரை புதிய குடிநீர் குழாய்கள் போடப்பட உள்ளன. இதற்காக ராட்சத குழாய்கள் ஆங்காங்கே சாலையோரம் இறக்கி வைக்கப்பட்டது. ஆனால் 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் குழாய்கள் பதிக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.