பயணிகள் பரிதவிப்பு
திருப்பூரில் தாராபுரம் சாலை மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது. ேகாவில்வழி பஸ் நிலையத்துக்கு செல்பவர்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பலர் ஆங்காங்கே உள்ள பஸ் நிறுத்தங்கள் நின்று டவுன்பஸ், ஷேர் ஆட்டோக்களில் செல்கிறார்கள். இந்தநிலையில் பலவஞ்சிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள பயணிகள் பஸ் நிறுத்தம் மிகவும் சேதம் அடைந்து மேற்கூரை இல்லாமல் உள்ளது. அருகில் கழிவுநீர் எப்போதும் தேங்கி கிடப்பதால் வெயில், மழை காலத்தில் பயணிகள் சாலையில் நின்று பயணம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் நிழற்குைடயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்பாகும்.
குமார், திருப்பூர்.