ராமநத்தம் பேருந்து நிலையத்தின் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் விளம்பர பதாகை வைத்துள்ளனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.