கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, மேலுமலை, சாமல்பள்ளம் சின்னாறு என 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் பலரும் பணி நிமித்தமாக தினமும் கிருஷ்ணகிரி, ஓசூருக்கு வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் இந்த ஊர்கள் அமைந்த போதிலும், இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. குறிப்பாக டவுன் பஸ்களும் இரவு 9 மணிககு மேல் கிடையாது என்பதால் இந்த கிராம மக்கள் இரவு நேரங்களில் ஊர்களில் இறங்க சிரமப்படுகிறார்கள். எனவே இரவு நேரத்தில் அனைத்து கிராம பஸ் நிறுத்தங்களிலும் நின்று செல்லும் வகையில் ஓரிரு பஸ்களையாவது இயக்கிட போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், குருபரப்பள்ளி.