போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2025-03-30 15:09 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு கீழ் குகை வழி பாதை செல்கிறது. இதில் வாங்கபாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் சாலையும், குப்புச்சிபாளையம் வைசியா பேங்க் காலனி சாலையும் இணையும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் காலை, மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி ஆரம்பிக்கும், விடும் நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதினால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி