கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி, தளவாப்பாளையம் கடைவீதி பஸ் நிறுத்ததில் பயணிகள் நிழற்குடை அமைக்காமல் பயணிகள் அமரும் இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தளவாப்பாளையம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.