பெரம்பலூர் நகரப் பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வேலை காரணமாக வெளியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வெயிலினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களை வெயிலில் இருந்து காப்பாற்றும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து சிக்னல்கள், ரேஷன் கடைகள் முன்பு பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.