பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பயணிகள் நடமாட்டத்தின்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.