பஸ் வசதி தேவை

Update: 2025-03-30 07:51 GMT

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட அருமனை பேரூராட்சியில் அழகல்மானசேகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு இதுவரை பஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. கிராமச்சாலை என்பதாலும், ஒரு பஸ் மட்டுமே சென்றுவர முடியும் என்பதாலும் பஸ் சேவைக்கு மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் 1½ கிலோ மீட்டர் நடந்து சென்று குழிச்சில் பகுதியில் பஸ் ஏறுகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்திட வேண்டும்.

-ஸ்ரீரங்கபாபு, அருமனை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி