போக்குவரத்து நெரிசல்

Update: 2025-03-23 17:36 GMT

தம்மம்பட்டி-கெங்கவல்லி செல்லும் சாலையில் 8-வது வார்டு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதி குறுகிய அளவில் இருப்பதால் 2 பஸ்கள் எதிரெதிரே வந்தால் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தனியார் வாகனங்களை சிலர் சாலையில் அதிக நேரத்திற்கு நிறுத்துகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்ககை எடுப்பார்களா?

-அகமது, தம்மம்பட்டி.

மேலும் செய்திகள்