கிருஷ்ணகிரி நகரில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக தங்கி உள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அரசு விரைவு பஸ்களிலும், தனியார் ஆம்னி பஸ்களிலும் செல்ல வேண்டி உள்ளது. ரெயில் வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் பஸ் பயணத்தை சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். பெங்களூருவில் இருந்து புறப்படும் அரசு விரைவு பஸ்கள் ஓசூரில் பயணிகளை ஏற்றி கிருஷ்ணகிரி வருகின்றன. பயணிகள் ஓசூரில் முழுமையாக ஏறி விட்டால் பஸ்கள் கிருஷ்ணகிரிக்கு வருவதில்லை. எனவே கிருஷ்ணகிரியில் வசிக்க கூடிய வெளி மாவட்ட பயணிகள் வசதிக்காக கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் முன்பதிவு மையம் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்னேஷ், கிருஷ்ணகிரி,