புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை ,ஆலங்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஆகிய ஊர்களுக்கு வேலை மற்றும் படிப்பு சம்பந்தமாக ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு 8 மணிக்கு பின்னர் இயக்கப்படுவது இல்லை. இதனால் பலரும் பஸ் வசதி இன்றி சிரமப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி வழித்தடத்தில் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களை தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.