புதிய நிழற்குடை கட்டப்படுமா?

Update: 2025-03-23 10:18 GMT
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ஹைஸ்கூல் மேடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு எதிரே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் பல இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையில் அச்சத்துடனே நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்