இட்டமொழி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் உள்ள ஆலமரத்தின் விழுதுகளும் பயணிகள் நிழற்குடையை சூழ்ந்து வளர்ந்ததால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு, புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.