மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து தருமபுரம்,மன்னம்பந்தல்,செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாக திருக்கடையூர் வரை பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக மேற்கண்ட வழித்தடத்தில் பஸ்கள் முறையாக இயக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் முறையாக பஸ் வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்