புதிய பாலம் அமைக்கப்படுமா?

Update: 2025-03-16 09:42 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள் இடுப்பொருட்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விவசாய பயிர்களுக்கு இடுகின்றனர். அதேபோல் அங்குள்ள முனியப்ப சாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் இந்த பாலம் மிகவும் குறுகியதாக இருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைத்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி