புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடை வீதி சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் சில மாடுகள் சாலையில் படுத்துக் கொள்வதினால் இதனை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் அதன் மீது வானத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.