பேரிகார்டு அமைக்கப்படுமா?

Update: 2025-03-09 14:42 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் புதுகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் குப்பையன்பட்டி சம்பட்டிவிடுதி வழியாக ஆலங்குடி செல்லும் சாலையும், வத்தனாக்கோட்டை குன்றாண்டார்கோவில் வழியாக கீரனூர் செல்லும் சாலையும் சந்திக்கும் நால்ரோடு சாலை சந்திப்பு உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் காயமடைந்து உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகிறது. எனவே கீரனூர் சம்பட்டிவிடுதி நான்கு சாலை சந்திப்பில் பேரிகார்டு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்