கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் மூலிமங்கலம் எதிர் சாலை, ஹைஸ் கூல் செல்லும் சாலையில் செல்லும் முன்பு பெரிய பள்ளம் உள்ளது. இந்த இடத்தில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, அப்பணிகள் முடிவு பெற்றநிலையில், பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.