மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேக்கம்பட்டியில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் வழியாக கிட்டாம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இங்கு வனபத்ரகாளியம்மன் கோவில் பிரிவில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.