திருவாக்கவுண்டனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ராமசாமி நகர் வரை சாலையோரம் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நடைமேடை ஆங்காங்கே கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இது தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை என்பதால் பாதசாரிகள் பயத்துடன் நடைமேடையை விட்டு சாலையில் செல்கின்றனர். எனவே கடைகளின் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி பாதசாரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?
-மந்திரம், சேலம்.