சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராம ஊராட்சி அலுவலகம் முன்பு மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை அங்குள்ள சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.