போக்குவரத்து விதிமீறல்

Update: 2025-03-02 16:25 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் மொபட், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயது நிரம்பாத சிறுவர்கள் பலரும் ஓட்டுகிறார்கள். குறிப்பாக அரசு பள்ளிகளுக்கே மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கிறார்கள். சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து விதிகளை மீறி இயக்குவதால் பிற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாகவும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சூளகிரி நகர பகுதிகளில் சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிரெட்டி, சூளகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி