சிக்னல் அமைக்கப்படுமா?

Update: 2025-03-02 16:22 GMT

கிருஷ்ணகிரி நகரில் ஆவின் மேம்பாலம் அருகில் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரே நேரத்தில் 4 சாலைகளிலும் வாகனங்கள் பாலத்தின் அடியில் சந்தித்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலை உள்ளன. கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ளதை போல ஆவின் மேம்பாலம் அருகில் சிக்னல் அமைக்க வேண்டும். அதேபோல தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி செல்லும் வாகனங்கள் சுற்றி பாலத்தின் அடியில் சென்று வருகின்றன. இதனால் நேரம் வீணாகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை திறந்து விட்டு, தர்மபுரி, சேலம் செல்லும் வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

-சதீஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி