திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் கல்லுப்பட்டி கிராமத்தில் மருங்காபுரி வட்டார கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கிற்கு செல்லும் பாதையில் உள்ள பாலம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த பாலம் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.