கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பள்ளிகள், வங்கிகள், சி.எஸ்.ஐ. தேவாலயம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளதால் இப்பகுதி எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த நிலையில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதினால் இப்பகுதியில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரவக்குறிச்சியில் உள்ள கரூர் சாலையில் சி.எஸ்.ஐ. தேவாலயம் முன்பு வேகத்தடை அமைத்து, இந்த வழியாக செல்லும் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.