பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா?

Update: 2025-02-23 16:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சாலையில் செல்லக்கூடிய பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே மாவட்டத்தில் பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்களை அகற்றிட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுப்பிரமணி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி