தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இருந்து சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் ஆகிய 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் நின்று ஏராளமானவர்கள் வெளியூர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். ஆனால் அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.