மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக கிளை சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் வழியாக காரமடை வரை 8ஏ எண் கொண்ட டவுன் பஸ் மற்றும் காரமடையில் இருந்து தேக்கம்பட்டி வழியாக மேட்டுபாளையம் வரை 8சி எண் கொண்ட டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை தொட்டதாசனூர், குட்டைபுதூர் வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் பயன்பெறுவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.