திருப்பூர் பல்லடம் தாலுகாவை சேர்ந்த சாமளாபுரம் பேரூராட்சியில் உள்ள உள்ள செந்தேவி பாளையம் கிராமத்திற்கு தினமும் நான்கு முறை கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளையில் இருந்து அரசு பஸ் (30 எம்) இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அநத மாலை ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த டவுன் பஸ்சை வழக்கம் போல் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க வேண்டும்.