செங்கோட்டை தாலுகா இலத்தூர் சனீஸ்வரர் கோவில் எதிரே எதிரே அச்சன்புதூர்-தென்காசி நெடுஞ்சாலையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து உயரமாக வளர்ந்துள்ளது. குறுகலான இடத்தில் சாலையை ஆக்கிரமித்து வளர்ந்த புதர் செடிகளால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்த புதர் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.