மதுரை செல்லூர் பகுதிகளில் வாகனங்களின் அதிகரிப்பின் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் மாணவ-மாணவிகள்,, வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தூசி பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. இதனால் சாலையில் செல்வோருக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.