கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-02-02 16:17 GMT

கொல்லிமலையில் உள்ள வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். அதேபோல அங்குள்ள மலைமேல் அமைந்துள்ள மாசி பெரியசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். அப்போது அங்கு சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் மட்டுமே சில பஸ்கள் வருகின்றன. இதனால் அந்த பஸ்களில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு பொதுமக்கள் ஏறுகிறார்கள். எனவே அந்த பகுதியில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்.

-முத்து, கொல்லிமலை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி