பள்ளிபாளையம் அருகே வெப்படையை அடுத்த சவுதாபுரம் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தினசரி கல்லங்காட்டுவலசு, மேட்டுக்கடை, ரங்கனூர், நால்ரோடு பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இவர்கள் செல்ல வசதியாக குமாரபாளையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் வெப்படை வரை சென்று திரும்பி விடுகிறது. சவுதாபுரத்திற்கு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த அவதியடைகின்றனர். மாணவ-மாணவிகளின் நலன்கருதி சவுதாபுரம் வரை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், வெப்படை.