போக்குவரத்து நெரிசலால் அவதி

Update: 2025-02-02 15:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வளர்ந்து வருகின்ற வர்த்தக நகரமாகும். இங்கு 10 திருமண மண்டபங்கள் உள்ளன. சுற்று வட்டார கிராம பகுதி மக்கள், அருகில் உள்ள தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் கறம்பக்குடி வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கறம்பக்குடி உள்ளது. குறிப்பாக முகூர்த்த நாட்களில் வாகனங்களில் செல்வது பெரும் சவாலாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலரும் அவதிப்படுகின்றனர். எனவே கறம்பக்குடியில் போக்குவரத்து காவல் பிரிவை ஏற்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி