கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் அருகே சீத்தப்பட்டி காலனி உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊரையொட்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் செல்ல தனி சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் திண்டுக்கல், பள்ளப்பட்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் பஸ்கள் சீத்தப்பட்டி காலனி ஊருக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது. அதேபோன்று கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்களும் ஊருக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அரவக்குறிச்சி வழியாக கரூர், திண்டுக்கல் செல்லும் பஸ்கள் சீத்தப்பட்டி காலனி சர்வீஸ் சாலையில் சென்று ஊருக்குள் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.