கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை பகுதிகளில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் லாரிகள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.
-சசிகுமார், கிருஷ்ணகிரி.