பராமரிப்பு இல்லாத பஸ் நிலையம்

Update: 2025-02-02 12:59 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை பலரும் கழித்து செல்கிறார்கள். இதனால் பஸ் நிலைய பகுதி துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக பஸ் நிலைய பகுதிகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் பலவும் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அதிகாரிகள் இதை கண்காணித்து தின்பண்டங்களை சுகாதார முறையில் தயாரித்து விற்பனை செய்திடவும், பஸ் நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஷியாம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்